புதிய தார் சாலை அமைக்க பூமி பூஜை : அமைச்சர் பங்கேற்பு
திருச்சி மாநகராட்சி 36 வது வார்டு இந்திரா தெருவில் புதிய தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளருமான அன்பின் மகேஷ் பொய்யா மொழி கலந்து கொண்டு தார் சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கிழக்கு மாநகர செயலாளரும் மண்டல தலைவருமான மதிவாணன், பகுதி செயலாளர் நீலமேகம் ,36 வது வார்டு கவுன்சிலர் கே.கே.கே. கார்த்திக்,வட்டச் செயலாளர்கள் சுரேஷ் ,ஆனந்த் கலந்து கொண்டனர்