பக்கவாதம் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் திருச்சி நியூரோ ஒன் மருத்துவமனை, மணப்பாறை லயன்ஸ் சங்கம் மற்றும் திருச்சி மாவட்ட தடகள சங்கம் சார்பில் சார்பில் பக்கவாதம் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் இன்று நடைபெற்றது. விராலிமலை சாலையில் உள்ள சௌமா பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற இந்த போட்டியில் 14 வயதுக்குட்பட்டோர் மற்றும் 14 வயதிற்கு மேற்பட்டோர் என வயதின் அடிப்படையில் ஆண்கள் – பெண்களுக்கு 3,4,5,6 கிலோ மீட்டர் வீதம் நான்கு பிரிவுகளாக தனித்தனியே போட்டி நடைபெற்றது.
போட்டியை மணப்பாறை டிஎஸ்பி ராமநாதன், சௌமா பள்ளி தாளாளர் ராஜரெத்தினம் ஆகியோர் போட்டியை துவக்கி வைத்தார். இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் ரொக்கப்பணம் பரிசாக வழங்கப்பட்டது. அதே போல் போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மராத்தான் ஓட்டத்தில் 600 பேர் பங்கேற்றனர். இதில் மணப்பாறை இன்ஸ்பெக்டர் கோபி, நியூரோ ஒன் மருத்துவமனை மருத்துவர்கள், பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள், பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.