புதிய சாலைகள் அமைக்கும் பணி : அமைச்சர் அன்பில்மகேஸ் தொடங்கி வைத்தார்
திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட திருச்சி மாநகராட்சி பகுதிகளில் புதிதாக அமைக்கப்படும் சாலை பணிகளுக்கு தொடக்க விழா நிகழ்வும் ஏற்கனவே பணிகள் தொடங்கப்பட்ட பகுதிகளையும் அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் பள்ளி கல்வித்துறை அமைச்சர்ருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருவெறும்பூர் மண்டலம் 3க்கு உட்பட்ட வார்டுஎண் 16,35,36,37,38,39,40,41,42,43 ஆகிய வார்டுகளில் ஏற்கனவே பணிகள் நடைபெற்று வருகிற 3வார்டு பகுதிகளில் அவைகளை பார்வையிட்டும் புதிதாக சாலை அமைப்பதற்கு தொடக்க விழா நிகழ்விலும் கலந்து கொண்டு சிறப்பித்தார்
மொத்தமாக 400 சாலைகள் புதிதாக அமைக்கப்படுகிறது அவைகளின் மொத்த கிலோமீட்டர் 55.22 மொத்த மதிப்பு ரூபாய் 39.65 கோடியாயாகும்
இந்நிகழ்வில் மண்டல3ன் குழு தலைவர் மதிவாணன் மாமன்ற உறுப்பினர்கள் நீலமேகம் தர்மராஜ் சிவா செந்தில் கார்த்தி ரமேஷ் தாஜுதீன் பியூலாமாணிக்கம் சீத்தாலட்சுமி கோவிந்தராஜ் ரெக்ஸ் மாநகராட்சி அதிகாரிகள் உதவி ஆணையர் ரமேஷ் உதவி செயற்பொறியாளர் ஜெகஜீவராமன் ஆகயோகலந்து கொண்டனர்