தமிழக அரசை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம்!
திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள செங்காட்டுப்பட்டி பகுதியில் பாஜகவினர் திமுக அரசை கண்டித்து பத்து அம்ச கோரிக்கை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், தேர்தல் வாக்குறுதியாக தமிழகத்தில் உள்ள அணைத்து குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் மாதந்தோறும் வழங்கபடும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்துவிட்டு இப்பொழுது தேர்ந்தெடுக்கப்பட்ட மகளிருக்கு மட்டும் வழங்குவதாக அறிவித்து இருப்பதை கண்டித்தும் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் உரிமைத்தொகை வழங்க வேண்டும் என்றும், மதுக்கடைகளை மூடி தமிழகத்தில் பூரண மதுவிலக்கு தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும் என்று,10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செங்காட்டுப்பட்டி பகுதியில் துறையூர் பாஜக ஒன்றிய துணைதலைவர் ஆனந்த் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசே திமுக அரசே அனைத்து குடும்பதலைவிகளுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கிடு, காட்டாதே காட்டாதே பெண்களிடம் பாரபட்சம் காட்டாதே,தடுத்து நிறுத்து தடுத்து நிறுத்து கஞ்சா விற்பனையை தடுத்துநிறுத்து, அனுமதிக்காதே அனுமதிக்காதே கள்ள சாராயத்தை அனுமதிக்காதே போன்ற கண்டன கோஷங்கள் ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்டது, இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தர்மராஜ், கூட்டுறவு பிரிவு மாவட்டதுணைத் தலைவர் தனபால் ,அரசுதொடர்பு பிரிவுமாவட்டசெயலாளர் நிதீஷ்குமார், தலைவர் குமரேசன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் அகிலன்,
ஒன்றிய மகளிர் அணி செயலாளர்திவ்யா,மஞ்சுளா மற்றும் ராமராஜ், சேகர் உள்பட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு திமுக அரசை கண்டித்துகோசங்கள் எழுப்பினர்