இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருவெள்ளரை ஊராட்சியில் உள்ள குண்ணாகுளத்தில் திருமணம் ஆகி 3 வருடங்களேயான இளம் பெண் குடும்பப் பிரச்சனை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மண்ணச்சநல்லூர் அருகே திருவெள்ளறை ஊராட்சியில் உள்ள குண்ணாக்குளத்தைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். இவருடைய மனைவி ஐஸ்வர்யா்(23) இவர்களுக்கு திருமணம் ஆகி 3 வருடங்களே ஆகிறது. ஒன்றரை வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. கணவர் மோகன்ராஜ் சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். கடந்த ஒரு வாரமாக குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு மனைவி சமைக்கவில்லை என கணவர் மோகன்ராஜ் திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த ஐஸ்வர்யா இரவு 10 மணிக்கு மேல் இருவரும் தூங்கி பிறகு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதிகாலை 3 மணிக்கு கணவர் பார்க்கும்போது மனைவி தூக்கில் தொங்கியது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து மண்ணச்சநல்லூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். திருமணம் ஆகி 3 வருடங்களேயான நிலையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து லால்குடி வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.