மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து தி.மு.க. மகளிரணி கண்டன ஆர்ப்பாட்டம்

0 277
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 24 மணிப்பூரில் பெண்கள் வன்கொடுமை செய்யப்ப்டட சம்பவத்தில் அமைதி காக்கும் பா.ஜ.க. அரசை கண்டித்து தி.மு.க. மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சிந்தாமணி அண்ணா சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தாய்மையை நிர்வாணப்படுத்தித், ஏழை எளிய, சிறுபான்மை மக்கள் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழலை உருவாக்கி இந்தியாவை உலக அரங்கில் தலைகுனிய வைத்த மணிப்பூர் கொடூரத்தை தடுக்கத் தவறிய ஒன்றிய பாஜக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழி காட்டுதலின் படி திருச்சி தெற்கு மாவட்ட திமுக மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி சார்பில் மணிப்பூரில் பெண்களுக்கு நடந்த வன்கொடுமை நிகழ்வுகளுக்கு நடவடிக்கை எடுக்காத ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் இன்று காலை 11 மணியளவில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட மாவட்ட மகளிர் அணி செயலாளர் பொற்கொடி தலைமை தாங்கினார். மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் ரம்யாபேகம் வரவேற்புரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன், மாநில இணை செய்தி தொடர்பாளர் கவிஞர் சல்மா, மாவட்டக் கழக துணைச் செயலாளர் லீலாவேலு, மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் கயல்விழி, மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் லதா, மலர்விழி, பூமிநாதேவி ரதி, தேக்கமலர், ஞானதீபம், மரிய மேரிகிளாரா, சீலா லாரன்ஸ், செல்வி லதா மாநகர மற்றும் மகளிர் அணி மகளிர் தொண்டர் அணி நிர்வாகிகள் மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட மகளிர் அணியினர் பலர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 1000க்கு மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு மணிப்பூர் கலவரத்தை நிறுத்தவும், பெண்களை நிர்வாணப்படுத்தி, பாலியல் வன்கொடுமை செய்தவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும், மணிப்பூர் முதல்வர் பதவி விலக வலியுறுத்தியும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

நிறைவாக மாநகர அமைப்பாளர் சிந்துஜா நன்றி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.