ஸ்ரீரங்கத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் தங்க நகை கொள்ளை
திருச்சி, ஜூலை 24 திருச்சி ஸ்ரீரங்கம் வடக்கு சித்திரை வீதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (70) இவர் பெங்களூரில் வசித்து வரும் தனது மகன் வீட்டிற்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சென்றிருந்தார். இந்நிலையில் அவர் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஸ்ரீரங்கம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.