கல்வி உதவி தொகை இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. வழங்கினார்

0 223
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 25 திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கல்வி உதவித்தொகை சம்பந்தமாக பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் இந்த வருடத்திற்கான தனது மாத சம்பளம் மற்றும் தன் சொந்த நிதி மொத்தம் தொகை ரூ.16 லட்சத்து 50 ஆயிரத்தை பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் முனைவர் இனிகோ இருதயராஜ் நேற்று வழங்கினார். இந்த கல்வி உதவித்தொகை 450 மாணவ,மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திருச்சி மாநகர செயலாளர் மு.மதிவாணன், துணை மேயர் திவ்யா தனக்கோடி அரியமங்கலம் கோட்டத் தலைவர் ஜெய நிர்மலா மற்றும் பகுதி செயலாளர்கள் வட்ட செயலாளர்கள் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.