பைக் மோதியதில் இளைஞர் உயிரிழப்பு
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சமயபுரம் அருகே இருங்கலூர் ஊராட்சி புரத்தாக்குடி மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (40). இவர் நேற்று அதிகாலையில் கூத்தூரில் உள்ள திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது லால்குடி அருகே மாந்துரை காந்திநகரை சேர்ந்த கார்த்திக் (32) மோட்டார் பைக்கில் பின்னால் வந்து கொண்டிருந்தார்.இந்நிலையில் பங்குனி பாலத்தில் ராஜ்குமார் நடந்து சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதமாக பின்னால் வந்த மோட்டார் பைக் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த ராஜ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்து குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.