அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த குடிநீர் ஆபரேட்டர் உடல் கருகி பலி
திருச்சி, ஜூலை 25 திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி மருங்காபுரி அடுத்த கண்ணுக்குழி கல்லாமேடு கிராமத்தைச் சேர்ந்த ரங்காகவுண்டர் மகன் பழனிச்சாமி (54) என்பவர் இவர் கண்ணுக்குழி ஊராட்சியில் வாட்டர் போர்டு (குடிநீர் விநியோகப்பாளர்) ஆபரேட்டர் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்றிரவு சுமார் 12.00 மணியளவில் தனது வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது பலத்த காற்றால் உயர் அழுத்த மின் கம்பி அறுந்து விழுந்ததில் வீட்டின் முன்பு உள்ள வேலியில் இருந்து தீப்பிடித்து எரிந்துள்ளது. இதை கண்ட பழனிச்சாமி பற்றி எரியும் தீயினை அணைக்க முற்படும் கவனிக்காமல் சென்ற போது அறுந்து கிடந்த உயர் அழுத்த மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்ததில் உடல் கருகிய நிலையில் சம்ப இடத்திலே பலியானார். அருகிலிருந்த பசு மாடும் மின்சாரம் பய்ந்ததில் பலியாகியுள்ளது, தகவல் அறிந்து வளநாடு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பழனிசாமியின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து விசாரனை நடத்தி வருகின்றனர்.