“பாஸ் தி பால்” வரவேற்பு நிகழ்ச்சி
திருச்சி,ஜூலை 26 திருச்சி மாவட்டத்திற்கு வருகை தந்த ஆசிய ஹாக்கி கோப்பை வரவேற்பு நிகழ்ச்சியான “பாஸ் தி பால்” நிகழ்வில் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு கோப்பையை வரவேற்று பொதுமக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தினர். உடன் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் ஸ்டாலின்குமார், அப்துல்சமது, மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அரசுத்துறை அலுவலர்கள் உள்ளனர்.