திருச்சி – தஞ்சையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சிகள்

0 409
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 25 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் (ஜூலை 26, 27)பயணமாக திருச்சி மற்றும் தஞ்சை மாவட்டங்களுக்கு வருகை தரவுள்ளார்.
அதன்படி நாளை (ஜூலை26) காலை 8.30 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது இல்லத்திலிருந்து புறப்படுகிறார். காலை 9 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திறகு வருகிறார். அங்கிருந்து 9.45 மணிக்கு இண்டிகோ விமானம் மூலம் புறப்பட்டு 11மணிக்கு திருச்சி விமானம் நிலையம் வந்தடைகிறார். விமான நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாக மன்னார்புரம் சுற்றுலா மாளிகையில் தங்குகிறார். பின்னர் மாலை 5 மணியளவில் சுற்றுலா மாளிகையில் இருந்து புறப்பட்டு ராம்ஜிநகரில் நடைபெறும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். கூட்டம் முடிந்த பின்பு சாலை மார்க்கமாக மீண்டும் சுற்றுலா மாளிகைக்கு வந்து இரவு அங்கேயே தங்குகிறார்.

மறுநாள் (ஜூலை 27) காலை 9.30 மணிக்கு சுற்றுலா மாளிகையிலிருந்து புறப்பட்டு வேளாண்மை கண்காட்சி நடைபெறும் தாயனூர் கேர் கல்லூரிக்கு செல்கிறார். அங்கு கண்காட்சியை தொடங்கி வைத்துவிட்டு, 10.45 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு சாலை மார்க்கமாக தஞ்சாவூர் செல்கிறார். தஞ்சாவூரில் திருமண நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். பின்னர் இரவு அங்கிருந்து புறப்பட்டு 9 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்தடைகிறார். 9.55 மணிக்கு விமானம் மூலம் திருச்சியிலிருந்து புறப்பட்டு இரவு 11 மணிக்கு சென்னை சென்றடைகின்றார்.
முதலமைச்சர் வருகையை முன்னிட்டு திருச்சி மற்றும் தஞ்சையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் திருச்சியில் மன்னார்புரம் முதல் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பங்கேற்கும் கூட்டம் நடைபெறும் ராம்ஜிநகர் மற்றும் கேர் கல்லூரி வரையில் முதலமைச்சரை வரவேற்கும் வகையில் தி.மு.க. கொடிகள், அலங்கார செய்யப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.