தமிழகத்திலும், காவிரி நீர் பிடிப்பு பகுதிகளிலும் நன்கு மழை பெய்ய பிரார்த்தனை.
தொட்டியம் மதுரை காளியம்மன் கோவிலில் ஆடி மாத விழாவை முன்னிட்டு மதுரை காளியம்மனுக்கு வளையல் காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
ஆடி மாதத்தை முன்னிட்டு தொட்டியம் மதுரை காளியம்மன் கோவிலில் சுவாமிக்கு தினசரி பல்வேறு விதமான அலங்காரங்களும் சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்று வருகிறது.
அதன் தொடர்ச்சியாக மதுரை காளியம்மனுக்கு வளையல் காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
முன்னதாக மதுரை காளியம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் ஆயிரக்கணக்கான வளையல்களினால் மதுரை காளியம்மன் அலங்கரிக்கப்பட்டார்.அப்போது மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும்,
மாணவ மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்கவும், தொழில் வளம் மேம்படவும் கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் நன்கு மழை பொழியவும் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மதுரை காளியம்மனை வழிபட்டனர்.