காவல் நிலையத்தில் தீக்குளிக்க முயற்சி செய்தவர் கைது….
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள சாம்பட்டி கிராமத்தை சேர்ந்த அடைக்க கவுண்டர் மகன் குணசேகரன் (வயது 55). அங்குள்ள கோவில் திருவிழாவின் போது கிடா வெட்டும் உரிமை சம்பந்தமாக அதே கிராமத்தை சேர்ந்த நாட்டாமை துரை (வயது 50) மற்றும் அதே உரைச் சேர்ந்த சின்னதுரை, வடிவேல், ராஜகோபால், தர்மராஜ் ஆகியோருக்கும் பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 26ம் தேதி குணசேகரன், நாட்டாண்மை துரை தரப்பை சேர்ந்தவர்கள் மீது மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில் புகார் அளித்திருந்தார். இது சம்பந்தமாக போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில் மணப்பாறை காவல் நிலையத்தில் குணசேகரன் மண்ணெண்ணையை தன் மீது ஊற்றிக் கொண்டார். பின்னர் அவரை போலீசார் தடுத்தனர். இதுகுறித்து அரசு பணியை செய்ய விடாமல் இடையூறு செய்ததாக குணசேகரன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.