நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய திமுக எம்எல்ஏ.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் நகரப்பகுதியில் உள்ள 6 வார்டில் உள்ள கழிவுநீர்கள் கால்வாய் அமைத்து செல்கிறது. அனைத்து பகுதிகளிலிருந்தும் வரும் கழிவுநீர்கள் ஒரு இடத்தில் 20 அடி கிணறு அமைத்து அதிலிருந்து குழாய் அமைத்து கழிவு நீரை வெளியேற்றுகின்றனர். இந்த சாக்கடை கால்வாயில் அடிக்கடி அடைப்புகள் ஏற்ப்பட்டு கழிவுநீர் வெளியேறாமல் தேங்கி நிற்கிறது. அதுமட்டுமின்றி மழைக்காலங்களில் மழை நீர் வடியாமல் சாலையில் தேங்கி நிற்கிறது.இதனால் சாலையில் செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.இந்த கழிவுநீர் கால்வாயை தூர்வார அப்பகுதி மக்கள் நீண்டநாள் கோரிக்கையாக வைத்திருந்தனர்.இந்நிலையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக எம்எல்ஏ கதிரவனிடம் கழிவுநீர் கால்வாயை தூர்வார மக்கள் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் கிடப்பில் கிடந்த நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று திமுக எம்எல்ஏ கதிரவன் கழிவுநீர் கால்வாய்களை தூர்வார பேரூராட்சி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தினார். அதன்பேரில் பேரூராட்சி நிர்வாகம் இன்று சாக்கடை கால்வாயை தூர்வாரினர்.கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணியிணை திமுக எம்எல்ஏ கதிரவன் சுட்டெரிக்கும் வெயிலில் நேரில் வந்து ஆய்வு செய்தார். பேரூராட்சி செயல் அலுவலர்,பணியாளர்கள்,திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.