அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி வழங்கல்
தா.பேட்டை ஒன்றியத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவிற்கு முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் தலைமை வகித்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசு வழங்கியுள்ள விலையில்லா மிதி வண்டிகளை வழங்கி வாழ்த்தி பேசினார். அப்போது மாணவ மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் அதன் வாயிலாக உயரிய வேலையில் சேர்ந்து பொருளாதாரத்திலும் சமூகத்திலும் உயர்ந்த இடத்தில் அங்கம் வகிக்கலாம் வருங்கால சந்ததிகள் நன்கு கல்வி அறிவுடன் சிறப்பான வாழ்க்கையை வாழ்வதற்கு இப்போது நீங்கள் படிக்கும் கல்வி அவசியம் அதேவேளை மாணவ மாணவிகள் கல்வியிலும் விளையாட்டுத்துறையிலும் முதலிடம் பிடிக்க வேண்டும் குறிப்பாக 234 தொகுதிகளில் முசிறி தொகுதியைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவ மாணவிகள் அதிக மதிப்பெண்கள் பெற்று முதலிடங்களை பெற்றால் அவர்களுக்கு வரும் ஆண்டில் தங்க காசு பரிசளிக்க உள்ளேன் அதேபோல அவர்களை பயிற்றுவித்து முதல் மதிப்பெண் பெற உதவும் ஆசிரியருக்கும் தங்க காசு வழங்குவேன். எனவே மாணவ மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என வாழ்த்தி பேசினார். தும்பலம் அரசு பள்ளியில் 40 , பைத்தம் பாறையில் 82 தா.பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 171, பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 154. மேட்டுப்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 85, பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 140, வாளசிராமணி அரசு மேல்நிலைப் பள்ளியில் 92 மொத்தம் 764 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா இலவச சைக்கிள்கள் வழங்கினார். திமுக ஒன்றிய செயலாளர்கள் பெரியசாமி, திருஞானம், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆப்பிள் கனேசன், மாவட்ட துணை செயலாளர் மயில்வாகனன், நிர்வாகி பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சி நிர்வாகிகள் தக்காளி தங்கராசு,மேட்டுப்பாளையம் பேரூராட்சி தலைவர் செளந்தர்ராஜன்,
துணைத் தலைவர் கோவிந்தன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.