சீல் வைக்கப்பட்ட அன்பு ஜோதி ஆஸ்ரம பயனாளிகள் 6 பேர் சாந்திவனத்தில் ஒப்படைப்பு.
சீல் வைக்கப்பட்ட விழுப்புரம் அன்பு ஜோதி ஆஸ்ரம பயனாளிகள் 6 பேர் சாந்திவனத்தில் ஒப்படைப்பு.
கடந்த ஜனவரி மாதம் விழுப்புரம் அன்பு ஜோதி ஆஸ்ரமம் (மனநலக் காப்பகம்) பல்வேறு புகார்களின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு சீல் வைக்கப்பட்டது. அங்கிருந்த நோயாளிகளை வேறு காப்பகங்களுக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது.
அந்தவகையில் விழுப்புரம் அருகே ஆரியூரில் உள்ள ஸ்ரீவெங்கடேஷ்வரா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த 5 ஆண்கள் மற்றும் 1 பெண் என மொத்தம் 6 நபர்கள் திருச்சி அருகே செயல்பட்டு வரும் சாந்திவனத்திற்கு அனுப்பி வைக்க மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்திற்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னை மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் 6 நபர்களையும் சாந்திவனத்தில் அனுமதிக்க வேண்டுமென சாந்திவனத்திற்கு கடிதம் அனுப்பியிருந்தார்.
அதனடிப்படையில் முருகவேல் (28), வேளாங்கன்னி (45), மாணிக்கம் (46), மாவீரன்
(24), கார்த்திக் (29), கோமதி
(57) ஆகிய ஆறு பேரையும் வெங்கடேஷ்வரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பணியாளர்கள் அங்கிருந்து வேன்மூலம் அழைத்து வந்து சாந்திவனம் இயக்குநர் அரசப்பன், மனநல சமூகப் பணியாளர் அக்சீலியா, உளவியலாளர் கமலி மற்றும் செவிலியர் மருதாம்பாள் ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.