மணப்பாறையில் கலைஞரின் நினைவு நாள் அனுசரிப்பு

0 214
Stalin trichy visit

மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் டாக்டர் கலைஞரின்
5ம் ஆண்டு நினைவு நாள். மணப்பாறையில் திமுகவினர் மலர்தூவி மரியாதை.

திருச்சி தெற்கு மாவட்டம், மணப்பாறை ஒன்றிய திமுகவின் சார்பில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பல்வேறு இடங்களில் அவருடைய உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. மணப்பாறை ஒன்றியத்தில் உள்ள சீகம்பட்டி, உசிலம்பட்டி, எப்.கீழையூர், பொடங்குபட்டி, சாம்பட்டி, வடுகபட்டி, பண்ணப்பட்டி, புத்தாநத்தம், கருப்பூர், வேங்ககுறிச்சி, செட்டியபட்டி, சூளியாபட்டி ஆகிய பகுதிகளில் கலைஞருக்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் மணப்பாறை ஒன்றிய கழக செயலாளர் சி. ராமசாமி, மாவட்டத் துணைச் செயலாளர் செங்குட்டுவன், மாவட்ட ஆதிதிராவிட அமைப்பாளர் எம்.சி. சிவக்குமார், மாநகர ஆதிதிராவிட அமைப்பாளர் அன்பழகன், ஒன்றிய பெருந்தலைவர் அமிர்தவள்ளி, மாவட்ட பிரதிநிதிகள் எ.ஆர். ஆனந்த், பந்தல் சி.எஸ்.முருகேசன், வடிவேல், துணைச் செயலாளர்கள் வேங்கை. தமிழ்ச்செல்வன், சி.கணேசன், ஆரோக்கியமேரி, பொருளாளர் லேத்ரெங்கநாதன், கவுன்சிலர் முருகேசன், பொய்கை பாலா, புத்தாநத்தம் சையது உள்ளிட்ட திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.

இதேபோல் மணப்பாறையில் நகர திமுக அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த டாக்டர் கலைஞரின் திருவுருவப்படத்திற்கு நகர் செயலாளர் மு.ம.செல்வம் தலைமையில் திமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் நகரத்தின் 27 வார்டுகளிலும் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதனையடுத்து திருச்சி சாலை கலைஞர் வளைவு அருகே அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் நகர திமுக நிர்வாகிகள் ஜான் பிரிட்டோ, பால்பாண்டி, கார்த்திக், பால்ராஜ், சோழராஜன், இலியாஸ், ராஜரெத்தினம், பாஸ்கர், முத்து உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.