வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகைகள் கொள்ளை

0 345
Stalin trichy visit

மணப்பாறை அருகே அரசுப் பேருந்து ஓட்டுனர் வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகைகள் கொள்ளை.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள ஆவிகாலப்பட்டியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார்  (44). இவர் புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் உள்ள அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக உள்ளார். 6ம்தேதி இரவு வீட்டை பூட்டிவிட்டு மனைவி ரேணுகா தேவியை அருகே உள்ள பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு வேலைக்கு சென்றுள்ளார். நேற்று மாலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு வீட்டினுள் இரண்டு அறைகளில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதனுள் இருந்த 10 சவரன் நகையை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இதுகுறித்து வளநாடு காவல்துறையருக்கு தகவல் அளித்தனர். இச்சம்பவம் குறித்து வளநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.