முசிறியில் சாலையோர வியாபாரிகள் கணக்கெடுப்பு முகாம்
முசிறியில் சாலையோர வியாபாரிகள் கணக்கெடுப்பு முகாம் – விடுபட்டவர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்துகொள்ள நகராட்சி ஆணையர் அழைப்பு.
திருச்சி, ஆக.8 திருச்சி மாவட்டம் முசிறி நகராட்சிக்குட்பட்ட சாலை ஓரங்களில் வியாபாரம் செய்யும் வியாபாரிகள் கணக்கெடுப்பில் விடுபட்ட வியாபாரிகள் தங்களது பெயரை சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் வருகின்ற 9.7.23 அன்று புதன்கிழமை நகராட்சியில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. எனவே சாலையோர வியாபாரிகள் முகாமில் கலந்து கொண்டு வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி கொள்ள இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள ஆணையர் அழைப்பானை விடுத்துள்ளார். மேலும் பிரதமர்
சுவா நிதி திட்டத்தின் கீழ் வங்கி மூலமாக சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கப்படுகிறது. எனவும் , 2023- 2024 ஆண்டுக்கு நகராட்சியால் சாலையோர வியாபாரிகள் கணக்கெடுப்பு பணி முடிக்கப்பட்டு, அவர்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. கணக்கெடுப்பில் எவரேனும் விடுபட்டிருந்தால் வருகிற 9.8.23. புதன்கிழமை அன்று நகராட்சியில் நடக்க இருக்கும் முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு நகராட்சி ஆணையர் கிருஷ்ணவேணி தெரிவித்துள்ளார்