திருச்சி பள்ளி மாணவிக்கு கோவிட் பாஸ்டிவ் – ஒரு வாரம் ஸ்கூல் லீவு!

0 672
Stalin trichy visit

தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வருகை புரிந்து வருகின்றனர்.

தற்போது பள்ளிகள் ஆரம்பித்ததால் தொற்று எண்ணிக்கை கணிசமாக உயர தொடங்கியுள்ளது. நாமக்கல், அரியலூர், தஞ்சாவூர் என தற்போது திருச்சியிலும் பள்ளி மாணவிக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருச்சி சோமரசம்பேட்டை அருகே இரட்டை வாய்க்காலில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளி (அமிர்தா வித்யாலயா), 12ம் வகுப்பு மாணவிக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 3ஆம் தேதி பள்ளி மாணவி பரிசோதனை செய்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று முதல், ஒரு வாரம் பள்ளிக்கு விடுமுறை அளித்தும், வகுப்புகள் ஆன்லைன் முறையில் நடைபெற உள்ளதாக பள்ளி நிர்வாகத்தினர் கூறியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.