முன் விரோதத்தில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதல்…

0 527
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் நம்பர் 1 டோல்கேட் அருகே தாளக்குடி ஊராட்சியில் உள்ள அகிலாண்டபுரத்தில் முன் விரோதத்தில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் வெடிகுண்டு வீச்சு.இருவருக்கு அரிவாள் வெட்டு. தனியார் பள்ளி பேருந்தின் கண்ணாடி உடைப்பு .போலீசார் குவிப்பு .மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் விசாரணை.

தாளக்குடியைச் சேர்ந்த புறா செல்வத்தின் மகன் மணிகண்டன், அங்கு மகன் வேலு, சேகர் மகன் அப்பாஸ், மற்றும் கீரமங்கலம் சேர்ந்த காமராஜர் மகன் பரந்தாமன். இவர்களுக்கும் அகிலாண்ட புரத்தைச் சேர்ந்த செழியன் மகன் மித்ரன், காட்டு ராஜா மகன் சுரேஷ் ஆகிய இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட தகராறில் முன் விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் இன்று மீண்டும் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இவர்கள் அனைவரும் கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் வெடிகுண்டை வீசி உள்ளனர். மேலும் மணிகண்டன், வேலு, பரந்தாமன், அப்பாஸ் ஆகியோர் சேர்ந்து சுரேஷ், மித்திரன் ஆகிய இருவரை அறிவாளால் வெட்டியுள்ளனர். இதில் இருவரும் காயமடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.மேலும் அந்த வழியாக சென்ற தனியார் பள்ளி பேருந்தின் கண்ணாடியை உடைத்து உள்ளனர். பள்ளி பேருந்தில் 20 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயணம் செய்து கொண்டிருந்தனர். இதில் பள்ளி மாணவர்களுக்கு எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை. மாற்று பேருந்து மூலம் மாணவர்களை அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.

இது குறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை செய்து வருகின்றனர். பதட்டமான சூழ்நிலை நிலவுவதால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் நேரில் விசாரணை செய்து வருகின்றார்.இந்த தகறாரில் ஈடுபட்ட அனைவரும் தப்பி ஓடிவிட்டனர். அவர்களைப் பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.இச்சம்பவத்தால் அப்பகுதியே பரப்பரப்பாக காணப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.