முசிறியில் ஒன்றிய கவுன்சிலர் கூட்டம்.
திருச்சி மாவட்டம் முசிறி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட மன்றத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கான கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் மாலா ராமச்சந்திரன் தலைமை வகித்தார். ஆணையர்கள் அண்ணாதுரை, மனோகரன் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் முசிறி ஒன்றியத்தில் தங்கள் பகுதிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஒன்றிய கவுன்சிலர்கள் பேசினர். மேலும். கூட்டத்தில் நகராட்சி, மாநகராட்சி ஆகியவற்றில் உறுப்பினர் மற்றும் தலைவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுவது போல் ஒன்றிய குழு தலைவர், துணைத் தலைவர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்களுக்கும் மதிப்பூதியம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
கூட்டத்தில் ஒன்றிய பொறியாளர்கள் கருணாநிதி, அகல்யா ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் துணை தலைவர் ரமேஷ் பாபு நன்றி கூறினார்.