கொடுத்த பணத்தை திருப்பி கேட்டவரை தாக்கிய 2 பேர் கைது

0 455
Stalin trichy visit

 

திருச்சி, ஆக.17 திருச்சி மாவட்டம், முசிறி அடுத்த அழகப்பட்டி கீழப்பள்ளத்தை சேர்ந்த சிலம்பன் மகன் பாலகிருஷ்ணன்( 48) இவர் அதே ஊரை சேர்ந்த பெரியசாமி மனைவி புவனேஸ்வரி (34) என்பவருக்கு ரூபாய் பத்தாயிரம் கடனாக கொடுத்துள்ளார் அதை திருப்பி கேட்க போன பாலகிருஷ்ணனை, புவனேஸ்வரி ,அவரது கணவர் பெரியசாமி, மற்றும் உறவினரான நாச்சம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த மலையாண்டி மகன் மலையான் (57) ஆகிய மூவரும் சேர்ந்து அடித்து கொலை மிரட்டல் விடுத்தனர் . மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவாறு கொடுத்த புகாரின் பேரில் முசிறி காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிரியா, வழக்கு பதிவு செய்து பெரிய சாமியையும், மலையானையையம் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

Leave A Reply

Your email address will not be published.