ஊடகம் இன்றி அமையாது உலகு : இலவச ஊடக பயிற்சி துவக்க விழா

0 250
Stalin trichy visit

ஊடகம் இன்றி அமையாது உலகு”

எனும் தலைப்பில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இலவச ஊடக பயிற்சி துவக்க விழா.

திருச்சி மாவட்டம் முசிறி அருகே தொட்டியம் கொங்குநாடு பொறியியல் கல்லூரி வளாகத்தில் ஊடகமின்றி அமையாது உலகு என்ற தலைப்பில் முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் மற்றும் கொங்குநாடு கல்வி நிறுவனங்களில் சார்பில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இலவச ஊடக பயிற்சி துவக்க விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் தலைமை வகித்து நீரின்றி உலகம் அமையாது என்பது போல ஊடகம் இன்றி இனி உலகம் அமையாது.எனவே ஊடகத்துறையில் பணிபுரிவதற்குரிய பயிற்சி அதற்குரிய கல்வி ஆகியவற்றை கற்று நீங்கள் அந்த துறைகளில் சேர்ந்தால் உங்களுக்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது என்று கூறினார். விழாவில் திருச்சி ஹலோ எஃப்எம் பண்பலை நிலைய தலைவர் டைரி சகா, நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆண்ட்ரூஸ் ,சன் டிவி செய்தி வாசிப்பாளர் சுஜாதா பாபு, சின்னத்திரை நடிகை பவித்ரா ,நிகழ்ச்சி தொகுப்பாளர் சந்தோஷ் ,கொங்குநாடு கல்லூரியின் குழுமங்களில் தலைவர் பெரியசாமி ஆகியோர் விழாவின் நோக்கம் குறித்து சிறப்புரையாற்றினர்.விழாவில் கலந்து கொண்ட சன் டிவி செய்தி வாசிப்பாளர் சுஜாதா பாபு மேடையிலேயே
நடை பெற்று கொண்டிருந்த நிகழ்ச்சியை செய்தியாக வாசித்து காட்டிய போது மாணவ மாணவிகள் பெரும் கோசத்துடன் கரவொலி எழுப்பி உற்சாகமடைந்தனர்.முன்னதாக நிகழ்ச்சியின் விருந்தினர்கள் பலூன் மற்றும் புறாக்களை பறக்க விட்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை இளைஞர் அணி நிர்வாகி அகத்தீஸ்வரன் செய்திருந்தார்.
விழா இறுதியில் கல்லூரியின் இணைச் செயலாளர் அசோக் குமார் நன்றி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.