சந்திரயான் – 3 வெற்றி – இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
தொண்டாமுத்தூர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் நினைவு நற்பணி மன்றம் சார்பில் சந்திரயான் 3 வெற்றியை இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு மன்றத் தலைவர் டாக்டர் மா.சிவக்குமார் தலைமையேற்று இனிப்பு வழங்கினார். விஜய் மக்கள் இயக்க கௌரவ ஆலோசகர் ஆர். சுரேஷ் , இந்திய மனிதநேய விருதாளர் சி. ஷைனிசிவக்குமார், சமூக ஆர்வலர்கள் சி.வருண், சி.நிவேதா, பி.ராமலிங்கம், கே.ரங்கநாதன், கோகுல் ஆர்.ரவிக்குமார், எஸ். பார்த்திபன், எஸ். சஞ்சய் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிலவின் தென் துருவத்தில் முதலில் கால் பதித்த நாடு இந்தியா என்னும் பெருமையை சந்திரயான் 3 வெற்றிகரமாக நிகழ்த்தி உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்திய சந்திரயான் 3 வெற்றி சரித்திர தமிழர் திரு. வீரமுத்துவேல் அவர்களுக்கும், சந்திரயான் 1 திரு. மயில்சாமி அண்ணாதுரை அவர்களுக்கும், சந்திரயான் 2 ஐ.எஸ்.ஆர்.ஓ தலைவர் திரு.சிவன் அவர்களுக்கும், இந்திய விஞ்ஞானிகள், விண்வெளி பொறியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் அனைவருக்கும் தொண்டாமுத்தூர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் நினைவு நற்பணி மன்றத்தின் சார்பில் ஆயிரம் ஆயிரம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.