மணப்பாறையில் புதிய வாக்குச்சாவடி மையம் அமைக்க கோரிக்கை
மணப்பாறை நகர பகுதியில் புதிய வாக்குச்சாவடி மையம் அமைக்க ஶ்ரீரங்கம் வருவாய் கோட்டச்சியரிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை.

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள 14, 16, 18 ஆகிய வார்டுகளுக்கு லெட்சுமி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் வாக்குச்சாவடி அமைந்துள்ளது.
இதேபோல் கோவில்பட்டி சாலையில் இயங்கும் நகராட்சி பெண்கள் தொடக்கப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடிக்கு 17 வது வார்டு வாக்காளர்கள் செல்கின்றனர். ஆனால் அங்கு போதிய இட வசதி இல்லாத நிலை உள்ளது. ஆகவே லெட்சுமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 17 வது வார்டு வாக்காளர்களுக்கும் இதே பள்ளியில் வாக்குச்சாவடி மையம் அமைக்க நடவடிக்கை மேற் கொள்ளவேண்டும்.
23, 24, 25 வார்டுகளைச் சேர்ந்த வாக்காளர்கள் தங்கள் பகுதியில் இருந்து சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் திண்டுக்கல் சாலையில் உள்ள சிறுமலர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையத்திற்குச் செல்கின்றனர். ஆனால் 23, 24, 25 வார்டுகளுக்கு அருகில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. நகர்மன்ற தேர்தலுக்கு மட்டும் அரசு மேல்நிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி அமைக்கப்படுவதுபோல் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களுக்கும் அரசு மேல்நிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி அமைத்து மேற்கண்ட வார்டு வாக்காளர்கள் பயன்பெறும் வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மணப்பாறை நகர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நகரசெயலாளர் ஜனசக்தி உசேன், ஶ்ரீரங்கம் கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.