அதிமுகவில் பன்னீர்செல்வத்தை நீக்கியது செல்லும் – உயர்நீதிமன்றம் தீர்ப்பு

0 390
Stalin trichy visit

பன்னீர் வகையறாக்களை அதிமுகவில் இருந்து நீக்கியது செல்லும், சென்னை உயர் நீதி மன்ற தீர்ப்பு – திருச்சியில் முன்னாள் MP குமார் ஏற்பாட்டில் அதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷபிக் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

பொதுக்குழு, பொதுச்செயலாளர் தேர்தல் செல்லும் என்ற தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்து இரு நீதிபதிகள் அமர்வு அதிரடியான தீர்ப்பை வழங்கி, அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த பன்னீர் உள்ளிட்ட 4 பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்தனர்.

இந்த தீர்ப்பு அதிமுகவினர் மத்தியில் பெரும் வரவேற்பையும் மகிழ்ச்சியும் ஏற்படுத்தி இருக்கிறது.

இதன் காரணமாக நாடு முழுவதும் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக திருச்சி அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில், தெற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் எம்.பி குமார் ஏற்பாட்டில், அதிமுகவினர் வெடி வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் தெற்கு மாவட்ட அவைத்தலைவர் அருணகிரி, பகுதி செயலாளர் தண்டபாணி, பொதுக்குழு உறுப்பினர் சாந்தி, வட்ட செயலாளர் ராஜா, அதிமுக கவுன்சிலர் அம்பிகாபதி, வட்ட கழக செயலாளர் முருகன், பகுதி கழக துணை செயலாளர் ராம் வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.