கார் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு
மண்ணச்சநல்லூர் அருகே நெற்குப்பையில் உள்ள திருச்சி துறையூர் சாலையில் கார் மோதி விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்தார்.
திருச்சி, ஆக.29 திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே மூவராயன்பாளையம் முருங்கப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்துரைமுருகன்(31). இவர் விராலிமலையில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இன்று காலை பணிக்கு செல்வதற்காக தனது மோட்டார் பைக்கில் மண்ணச்சநல்லூரில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது நெற்குப்பை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது முன்னாள் சென்ற மாட்டு வண்டி மீது மோட்டார் பைக் மோதி கீழே விழுந்து உள்ளார். அப்போது திருச்சி சுப்பிரமணியபுரம் இந்திரா காந்தி தெருவை சேர்ந்த கேசவன் (70) எதிரே காரில் வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் கீழே விழுந்த துரைமுருகன் மீது எதிரே வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது.இதில் துரைமுருகன் படுகாயம் அடைந்தார். விபத்தை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்த கொள்ளிடம் போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.பின்னர் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.