சமயபுரம் சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு கட்டணம் நாளை முதல் கட்டணம் உயர்கிறது

0 473
Stalin trichy visit

திருச்சி, ஆக.30 திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே திருச்சி சென்னை தேசிய சாவடியில் உள்ள சுங்கச்சாவடியில் நாளை முதல் வாகனங்களுக்கு கட்டணம் உயர்கிறது.

தமிழகத்தின் மையப் பகுதியான திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சமயபுரம் உள்ள சுங்கச்சாவடி வழியாக சென்னை, கன்னியாகுமரி, மதுரை, திருநெல்வேலி, திருச்செந்தூர் தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் இந்த சுங்கச்சாவடி மிகவும் முக்கிய வாய்ந்ததாக கருதப்படுகிறது. தினமும் பேருந்து, லாரி, வேன், கார் உள்ளிட்ட 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாகனங்கள் இந்த சுங்கச்சாவடியை கடந்து செல்கின்றன. இங்கு நாளை முதல் வாகனங்களுக்கான கட்டணம் உயர்கிறது. கார் வேன் ஜீப் போன்ற வாகனங்களுக்கு ஒரு முறை பயன்பாட்டுக்கு கட்டணம் ரூ. 55 என்றும் ஒரே நாளில் பலமுறை பயன்பாட்டுக்கான கட்டணம் ரூ.80 பதாகவும் பலமுறை பயன்பாட்டுக்கு மாத கட்டணம் ரூ. 1630 எனவும், இலகுரக வாகனம் ஒருமுறை பயன்பாட்டிற்கு ரூ.95 எனவும் ஒரே நாளில் பலமுறை பயன்பாட்டிற்கு ரூ. 145, மாத கட்டணம் ரூ. 2,850 என்றும் ட்ரக் பேருந்து போன்ற வாகனங்களுக்கு ஒரு முறை பயன்பாட்டிற்கு ரூ.190 ஒரே நாளில் பலமுறை பயன்பாட்டிற்கு 285 மாத கட்டணமாக 5,700 என்றும் பல அச்சுகள் கொண்ட வாகனம் ஒருமுறை பயன்படுத்திற்குரூ. 305 ஒரே நாளில் பலமுறை பயன்பாட்டுக்கு ரூ.460 பலமுறை பயன்பாட்டிற்கு மாத கட்டணம் ரூ. 9,160 என்று உயந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.