காரில் கடத்தி வரப்பட்ட ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல்

0 249
Stalin trichy visit

காரில் கடத்தி வரப்பட்ட ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல்.

 

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே மாடக்குடியில் உள்ள திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் காரில் கடத்தி வரப்பட்ட்,ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல்.

சமயபுரத்தில் இருந்து காரில் குட்கா பொருட்கள் லால்குடி வழியாக டால்மியாபுரத்துக்கு கடத்தி செல்லப்படுவதாக லால்குடி டிஎஸ்பி அஜய்தங்கத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அவரது உத்தரவின்படி திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து போலீசார் நேற்று இரவு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது சமயபுரத்தை அருகே மாடக்குடியில் உள்ள திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற ஒரு காரை நிறுத்தி சோதனை செய்ததில் குட்கா பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து குட்கா பொருட்களையும், காரையும் பறிமுதல் செய்த போலீசார் புகையிலை பொருட்களை கடத்தி வந்த இனாம் சமயபுரம் ஒத்தக்கடை ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த சஞ்சீவி மகன் 27 வயதான கமல் என்கின்ற யுவனேஸ்வரன் என்பவரை பிடித்து சமயபுரம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு ரூ.2½ லட்சம் ஆகும். மேலும் இந்த புகையிலை பொருட்கள் சமயபுரம், லால்குடி, டால்மியாபுரம், திருச்சி, மண்ணச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் விற்பனை செய்ய கடத்தி வந்தது தெரியவந்தது.

Leave A Reply

Your email address will not be published.