முசிறி நகராட்சி பகுதிகளில் குடிநீர் வழங்கும் நேரத்தில் மாற்றம்
வெள்ளூர் நீரேற்று நிலையத்தில் மின் மோட்டார் பழுது – முசிறி நகராட்சி பகுதிகளில் குடிநீர் வழங்கும் நேரத்தில் மாற்றம் – நகராட்சி ஆணையர் அறிவிப்பு
முசிறி நகராட்சியின் ஆணையர் கிருஷ்ணவேணி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
முசிறி நகராட்சிக்கு சொந்தமான வெள்ளூர் தலைமை நீரேற்று நிலையத்தில் உள்ள பிரதான மோட்டார் பழுதடைந்துள்ளது.
எனவே மின் மோட்டாரை பழுது நீக்கி சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதால் முசிறி நகராட்சியின் மூலம் பொது மக்களுக்கு வழங்கப்படும் குடிநீரின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது
என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது..எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாகவும், பாதுகாப்பான முறையிலும் பயன்படுத்துமாறு கேட்டுக்
கொள்ளப்படுகிறது.என அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.