முசிறி கோட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்து கட்சி கூட்டம்
முசிறி கோட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்து கட்சியினருக்கு வாக்குச்சாவடிகள் மாற்றம் மற்றும் திருத்தம் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கோட்டாட்சியர் ராஜன் தலைமை வகித்தார். தாசில்தார் பாத்திமா சகாயராஜ், தேர்தல் துணை தாசில்தார்கள் முசிறி லோபோ, தொட்டியம் செல்வி, துறையூர் கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேர்தல் நேரத்தில் நிர்வாக காரணங்கள் மற்றும் பொதுமக்கள் வசதிக்காக முசிறியில் அப்பன நல்லூர், நத்தம், அரங்கூர், மணமேடு துறையூர் சட்டமன்ற தொகுதியில் வாக்குச்சாவடி எண்கள் 128 ,163, 173, 212 ,235 ஆகிய வாக்குச்சாவடிகள் மாற்றம் செய்யப்படுகிறது. வாக்காளர்கள் வாக்குச்சாவடியில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு செல்ல வேண்டி இருந்தால் புதிய வாக்குச்சாவடி நிலையம் அமைக்கப்படும், தற்போது வீடு வீடாக கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது, இறந்தவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்ய படிவம் 7 வழங்க வேண்டும் என்று கோட்டாட்சியர் ராஜன் தெரிவித்தார். கட்சி நிர்வாகிகள் திமுக மெடிக்கல் முரளி ,அண்ணாதுரை, வீரபத்திரன், சரவணன், ஆனந்தன் , சிவகுமார், பாலசுப்பிரமணியன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கலைச்செல்வன், இளையராஜா, காங்கிரஸ் சார்பில் சுரேஷ் ,காமராஜ் தேமுதிக சார்பில் சுந்தர்ராஜ் , மோகன்ராஜ் , ரவிகுமார் ,சிபிஐ சார்பில் சண்முகம், சிபிஎம் சார்பில் நல்லுசாமி, ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.