விவசாய உறுப்பினர்களுக்கான ஆலோசனை குழு கூட்டம்

0 228
Stalin trichy visit

மும்முடி சோழமங்கலம் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் அட்மா திட்டத்தில் உறுப்பினர்களுக்கு கூட்டம் நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள மும்முடி சோழமங்கலம் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் அட்மா திட்டத்தில் வட்டார அளவில் விவசாய உறுப்பினர்களுக்கான ஆலோசனை குழு கூட்டம் கூட்டம் நடைபெற்றது.

இதில் வேளாண்மை உதவி இயக்குனர் சுகுமார் பேசுகையில் வேளாண்மை துறையில் செயல்படுத்தப்படும் மானிய திட்டங்கள், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், பாரதப் பிரதமரின் கௌரவ நிதி திட்டம் , குறுவை மாற்றுப் பெயராக உளுந்து சாகுபடி செய்தல், சம்பா பருவத்திற்கான நெல் விதை தேர்வு மற்றும் உயிர் உரங்கள் விதை நேர்த்தி செய்தல் பற்றி விரிவாக விளக்கி கூறினார். தோட்டக்கலை உதவி இயக்குனர் திருமதி தங்கம் பேசுகையில் பழ செடி தொகுப்பு வழங்குதல், தேசிய தோட்டக்கலை இயக்கம் திட்டத்தின் கீழ் வாழை சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு வாழை தார் உறை வழங்குதல் மற்றும் மாநில தோட்டக்கலை மேம்பாடு திட்டத்தின் கீழ் மாடித்தோட்டம் பைகள், விதைகள் வழங்குதல் பற்றி விரிவாக விளக்கி கூறினார்.. மேலும் லால்குடி தென்றல் கூட்டுப் பண்ணைய உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் ராஜேந்திரன் தாங்கள் கொள்முதல் செய்து விற்பனை செய்யும் உளுந்து மற்றும் எள் ஆகியவற்றை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறினார்.அட்மா திட்ட சேர்மன் அப்துல் ரகுமான் பேசுகையில் அனைத்து விவசாயிகளும் உரிய சாகுபடி தொழில் நுட்பங்கள், அங்கக வேளாண்மை தொழில் நுட்பங்கள் பயன்படுத்தி விவசாயம் செய்து பயன்பெற கேட்டுக் கொண்டார். மாநில விவசாயிகள் ஆலோசனை குழு உறுப்பினர் பிடரிக் நிக்சன் மீன் குட்டை அமைத்தல் மீன் பண்ணை தொழில் செய்தால் மானியம் பெறும் முறைகள் பற்றி உறுப்பினர்களுக்கு விரிவாக விளக்கி கூறினார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் சபரி செல்வன் ஆலோசனை குழு கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் ஏற்பாட்டினை அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் கார்த்திக், தமிழ்மணி ஆகியோர் செய்து இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.