மாநில துப்பாக்கி சுடும் போட்டியில் 13 பதக்கங்களை வென்ற திருச்சி ரைபிள் கிளப் உறுப்பினர்களுக்கு பாராட்டு

0 292
Stalin trichy visit

மதுரை ரைப்பிள் கிளப்பில் கடந்த 11.07.2023-ந்தேதி முதல் 23.07.23 வரை நடத்தப்பட்ட 48-வது மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியிலும் மற்றும் இந்திய தேசிய ரைபிள் சங்கம் (National Rifle Association of India) சார்பாக திருவனந்தபுரத்தில் கடந்த 17.08.23 முதல் 21.08.23 வரை நடத்தப்பட்ட 14வது தென்மண்டல துப்பாக்கி சுடும் போட்டியிலும் திருச்சி ரைபிள் கிளப் உறுப்பினர்கள் 54 பேர்கள் கலந்துக்கொண்டனர்.

இதில் திருச்சி ரைபிள் கிளப் வீரர்கள் 3 தங்கம், 5 வெள்ளி மற்றும் 5 வெண்கலம் உள்ளிட்ட 13 பதக்கங்களை வென்றுள்ளனர். மேலும் 24 துப்பாக்கி சுடும் வீரர்கள் 14 வது தென்மண்டல சுடும் போட்டிக்கு (14th South Zone Shooting Competition) தகுதி பெற்றுள்ளனர். மேலும் 13 துப்பாக்கி சுடும் வீரர்கள் 66வது தேசிய துப்பாக்கி சுடும் போட்டி-2023-க்கு (66th National Shooting Competition-2023) தகுதி பெற்றுள்ளனர்.

இப்போட்டிகளில் கலந்துக்கொண்டு பதக்கங்களை வென்ற திருச்சி ரைபிள் கிளப் உறுப்பினர்கள் / துப்பாக்கி சுடும் வீரர்களுக்கு நேற்று (30.08.23)-ந்தேதி திருச்சி மாநகரம் கே.கே.நகர், மாநகர ஆயுதப்படை வளாகத்தில் அமைந்துள்ள திருச்சி ரைபிள் கிளப்பில் பரிசு மற்றும் பதக்கங்கள் வழங்கும் விழா திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் G.கார்த்திகேயன்,  முன்னிலையில், திருச்சி ரைபிள் கிளப்பின் தலைவரான திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி,  தலைமையில் நடைபெற்றது. இதில் பதக்கங்களை வென்ற வீரர்களுக்கு பரிசுகளை வழங்கியும், மேலும் தேசிய அளவில் நடைபெறும் பல போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற தனது பாராட்டுகளையும் தெரிவித்துக்கொண்டார்கள்.

இவ்விழாவில் சிறப்பம்சமாக திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் G.கார்த்திகேயன், மேற்படி போட்டியில் கலந்துகொண்டு 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.

மேலும் இவ்விழாவில் திருச்சி ரைபிள் கிளப் நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.