மானிய விலையில் பவர் டில்லர் கருவிகள் வழங்கல்
திருச்சி, செப்.5 திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் வேளாண்மை இயந்திர மயமாக்கல், உப இயக்கத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மானிய விலையில் பவர் டில்லர் மற்றும் பவர் வீடர் கருவிகளை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் வழங்கினார்கள். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி, கதிரவன், மண்டலத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.