திருச்சி ஜங்சன் ரயில் நிலைய வளாகத்திற்குள் ஆட்டோ, டூவிலர்கள் நுழைய தடை!
திருச்சி, செப்.6 திருச்சி ஜங்சன் ரயில் நிலைய முதன்மை வளாகத்திற்குள் இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோ செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருச்சி ஜங்சன் ரயில் நிலையம் வழியாக நாள்தோறும் 40க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. ரயில்களுக்கு செல்லும் பயணிகளை அழைத்து செல்ல ஆட்டோக்கள், கார்கள், இருசக்கர வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்நிலையில் இன்று முதல் ஜங்சன் ரயில் நிலைய முதன்மை வாயில் வழியாக ஆட்டோக்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. ரயில் திருமண்டபம் வழியாக வரும் புதிய வாயிலை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது,