பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் : அமைச்சர் அன்பில் மகேஷ் அறிக்கை
திருச்சி தெற்கு மாவட்டத்தில் பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை !
மாவட்ட கழக செயலாளரும், அமைச்சருமான, அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிக்கையில்
கடமை – கண்ணியம் – கட்டுப்பாடு என்ற தாரக மந்திரத்தை அரசியல் உலகிற்கு எடுத்துக்காட்டிய அரசியல் ஆசான், தந்தை பெரியாரின் வரிசாகவும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் அண்ணனாகவும் வாழ்ந்து மறைந்த அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 15/09/23 வெள்ளிக்கிழமை காலை 8 மணி அளவில் திருச்சி சிந்தாமணியில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கும் அதனைத் தொடர்ந்து காலை 8.15 மணிக்கு திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளோம்.
இந்த நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில, மாவட்ட, நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, பகுதி, நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளைக் கழகச் செயலாளர்கள், நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கழகத் தொண்டர்கள் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம் என்று தெரிவித்துள்ளார்.