தந்தை பெரியார் 145 ஆவது பிறந்த நாள் விழா : அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிக்கை

0 575
Stalin trichy visit

திருச்சி, செப். 16 திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான, அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில், தந்தை பெரியாரின் ஒவ்வொரு பிறந்த நாளும் “சமூக நீதி” நாளாக கடைப்பிடிக்க வேண்டும் என்று தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி தந்தை பெரியாரின் 145 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நாளை (17.09.23 ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 மணி அளவில் மாநகர செயலாளரும் மண்டல தலைவருமான மு.மதிவாணன் தலைமையில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் கே.என். சேகரன், வண்ணை அரங்கநாதன், பி.எம். சபியுல்லா ஆகியோர் முன்னிலையில் திருச்சி மாநகர கழகத்துக்கு உட்பட்ட காட்டூர் பகுதியில் அமைந்துள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள். இந்த நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர்,வட்ட,வார்டு,கிளை கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் மாவட்ட,தொகுதி அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள், மற்றும் கழக தொன்டர்கள் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.