வீட்டிற்குள் புகுந்து நகையை திருடிச் சென்ற மர்மநபர்கள்

0 398
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடியில் நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் வீட்டின் பீரோவில் இருந்த 33 1/2 கிராம் தங்க நகையை திருடி சென்றனர்.

புள்ளம்பாடி உதயா நகரை சேர்ந்தவர் 49 வயதான குமார் என்கின்ற சவப்பெட்டி குமார் .இவரது மகன் திருச்சி டிவிஎஸ் டோல்கேட்டில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு பணிகளை முடித்துவிட்டு 12 மணிக்கு மேல் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது குமார் கதவை திறந்து விட்டு மீண்டும் கதவை சாத்தாமல் தூங்கியதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் வீட்டின் உள்ளே நுழைந்து பீரோவில் இருந்த 33 1/2 கிராம் தங்க நகையை திருடி சென்றனர். காலையில் எழுந்து பார்த்தபோது பீரோ திறக்கப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.பின்னர் பீரோவை சொதனை செய்த போது பீரோவில் இருந்த நகைகள் திருட்டுப் போனது தெரியவந்த்து.

இதுகுறித்து குமார் கல்லக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் கல்லக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.