ஸ்டேண்ட் போர்டு வைப்பதில் இரு தரப்புக்கு இடையே தகராறு…
சமயபுரத்தில் சி.ஐ.டி.யு ஆட்டோ சங்கத்திற்கும், இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கத்திற்கும் ஸ்டேண்ட் போர்டு வைப்பதில் இரு தரப்பினருக்குமிடையே தகராறு.
திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் சிஐடியு ஆட்டோ சங்கத்திற்க்கும் இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கத்திற்க்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்டேண்ட் போர்டு வைப்பதில் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு. ஸ்டேண்ட் போர்டை கழற்றி எறிந்ததால் இருதரப்பினருக்குமிடையே ஏற்ப்பட்ட தகராறு கைகலப்பாக மாறியது. இரு தரப்பினரையும் சமயபுரம் போலீசார் சமாதானப்படுத்தினர்.
சமயபுரம் நால்ரோடு பகுதியில் சிஐடியு ஆட்டோ ஓட்டுநர் தொழிலாளர் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆட்டோ சங்கத்தில் 32 உறுப்பினர்கள் ஆட்டோ ஓட்டி வருகின்றனர். அதேபோல் சமயபுரம் பைபாஸ் சாலையில் உள்ள இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் 20 உறுப்பினர்கள் ஆட்டோ ஓட்டி வந்தனர்.
இந்நிலையில் சிஐடியு ஆட்டோ உறுப்பினர்கள் அராஜகம் செய்யும் விதமாக இரண்டு ஸ்டாண்டிலும் ஆட்டோ ஓட்டி வந்ததால் சிஐடியு உறுப்பினர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த சங்கத்திலிருந்து விலகி இந்து முன்னணி சங்கத்தில் இணைந்துள்ளனர். அப்போது சமயபுரம் பைபாஸ் சாலையில் சிஐடியு சங்கம் சார்பில் வைத்த சங்க போர்டை இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கம் கழற்றி வைத்ததாக கூறப்படுகிறது. மீண்டும் சிஐடியு சங்கத்தினர் அங்கே போர்டை நட்டு வைத்துள்ளனர். இந்நிலையில் சிஐடியு சங்கத்தினர் இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்க ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டியதாக கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சிஐடியு சங்கத்தை கண்டித்து இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கத்தினர் இன்று மாலை சமயபுரம் நால்ரோடு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக அறிவித்தனர். அப்போது அந்த ஆர்ப்பாட்டத்திற்காக தற்காலிகமாக இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கத்தினர் போர்டு வைக்கும்போது சிஐடியு சங்கத்தினர் இந்து முன்னணி சங்கத்தினர் வைத்த போர்டு கழட்டி எறிந்தனர். இதனால் இரு தரப்பினர்களுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.
இதனைத் தொடர்ந்து அங்கு வந்த சமயபுரம் போலீசார் தகராறில் ஈடுபட்டவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் ஆர்ப்பாட்டத்தை இன்று நடத்த வேண்டாம் என சமயபுரம் போலீசார் கேட்டுக் கொண்டனர்.
அது சமயம் இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கத்தின் சார்பாக சில கோரிக்கைகள் வைக்கப்பட்டது…
1..பிரச்சனைக்கு தீர்வு ஏற்படும் வரை இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கத்தினுடைய ஸ்டாண்டில் சிஐடியு ஆட்டோக்கள் தலையிடக்கூடாது எனவும், எங்கள் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கு எவ்வித பிரச்சனையும் ஏற்படக்கூடாது. அதற்கு காவல்துறை பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது …
அந்த கோரிக்கைகளை சமயபுரம் காவல் ஆய்வாளர் ஏற்றுக் கொண்டதையுடுத்து ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.