கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை

0 303
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே தழுதாளப்பட்டியில் பெற்றோர் கண்டித்ததால் மன உளைச்சலில் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மண்ணச்சநல்லூர் அருகே தழுதாளப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் 17 வயதான கல்லூரி மாணவர்.இவர் முசிறியில் உள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் விடுமுறை நாட்களில் கூலி வேலைக்கு செல்வது வழக்கம். அப்படி வேலைக்கு செல்லும் போது ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இதையறிந்த அவரது தாய் முதலில் படிப்பில் கவனம் செலுத்து பின்னர் வயது வந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம் என மகனுக்கு அறிவுரை கூறியுள்ளார். இதனால் கல்லூரி மாணவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். இலையில் நேற்று தழுதாளப்பட்டி அய்யனார் கோயில் அருகே உள்ள புளிய மரத்தில் கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த சிறுகனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து சிறுகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.