திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. மகளிர்அணி கூட்டம்

0 499
Stalin trichy visit

திருச்சி தெற்கு மாவட்டம், மாவட்ட மாநகர மகளிர்அணி, மகளிர் தொண்டரணி, அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் கூட்டம் திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது
கூட்டத்திற்கு மாநில மகளிர் அணி செயலாளர் ராணி சிறப்புவிருந்தினராக கலந்து கொண்டு மாவட்ட கழகச் செயலாளர்  பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாநகர  கழகச் செயலாளர் மதிவாணன் ஆகியோர் உரைஆற்றினர்
கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

1.கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் மூலம் ஒரு கோடி 60 லட்சம் பயனாளிகளுக்கு ரூபாய் ஆயிரம் வழங்கிய மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு கூட்டம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது

2.வருகின்ற செப்டம்பர் 26 ஆம் தேதி நடைபெறுகின்ற மாவட்ட மாநகர மகளிர் நிர்வாகிகள் கூட்டத்தில் பெரும் திரளாக பங்கு கொள்வது

3.மாவட்டத்திற்கு தலைமை கழகத்தால் நிர்ணயிக்கப்பட்ட 25000 மகளிர் உறுப்பினர்களை சேர்க்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது

4.ஒன்றிய நகர மாநகர புதிய நிர்வாகிகள் பட்டியலை உடன் தயார் செய்வது

5. மகளிர் அணி மகளிர் தொண்டரணி நிர்வாகிகளுக்கு பயிற்சி பாசறை நடத்துவது

கூட்டத்தில் மகளிர் அணி அமைப்பாளர்கள் பொற்கொடி கயல்விழி சிந்துஜா
ரம்யாபேகம் மற்றும் துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.