குண்டூர் ஏரி சீரமைக்கும் பணி : அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார்

0 254
Stalin trichy visit

திருவெறும்பூர் அருகே உள்ள குண்டூர் ஏரியை தனியார் அமைப்புடன் சேர்ந்து சீரமைக்கும் பணியினை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

திருச்சி கலெக்டர் பிரதீப் குமார் தலைமை வகித்தார்
பொதுப்பணித்துறை ஆற்று பாதுகாப்பு செயற்பொறியாளர் நித்தியானந்தம், உதவி செயற்பொறியாளர் ராஜரத்தினம், உதவி பொறியாளர் புகழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தார்.

திருவெறும்பூர் அருகே உள்ள குண்டூர் ஏரி மெகா பவுண்டேஷன் என்னும் தனியார் அமைப்புடன் சேர்ந்து புனரமைக்கும் பணியை தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார்.

இந்த ஏரி 377 ஏக்கர் பரப்பளவு கொண்டது, இதன் மூலம் குண்டூர், கும்பக்குடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 627 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.

இந்த ஏரிக்கு புதிய மேடு கட்டளை வாய்க்கால் மூலம் தண்ணீர் வந்து சேர்வதுடன் மழைக்காலங்களில் பெய்யும் வாரி தண்ணீரும் இந்த ஏரியில் வந்து சேர்கிறது.

இந்த நிலையில் இந்த ஏரியின் கரையை பலப்படுத்தும் விதமா மெகா பவுண்டேஷன் என்னும் தனியார் அமைப்பு திருச்சி புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை ஓரமாக பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையில் கரை அமைப்பது, குளத்தின் கரையை சுற்றி பலப்படுத்துவது குறுங்காடு அமைப்பது மற்றும் குளத்தைச் சுற்றி கரைகளில் பனை விதைகளை விதைப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கிறது.

இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியதாவது

இந்த தனியார் அமைப்பு இதுவரை 177க்கும் மேற்பட்ட குளங்களை இது போல் சீரமைத்துள்ளது. தற்பொழுது கொண்டு குளம் 377 ஏக்கர் பரப்பளவு கொண்டது இந்த ஏரியை சீரமைக்கும் பணி தற்போது தொடங்கப்பட்டு உள்ளதாகவும் இது திருவெறும்பூர் தொகுதியில் ஆரம்பிப்பது தனக்கு பெருமையாக உள்ளது, இதில் என்ன செய்யலாம் மக்களின் பொழுதுபோக்கு இடமாக மாற்றுவது குறித்து மாவட்ட நிர்வாகத்துடன் கலந்து பேசி முடிவு செய்யப்படும் மேலும் இந்த பணி 45 நாட்கள் தொடர்ந்து நாள் ஒன்றுக்கு 15 மணி நேரம் என்று அளவில் நடைபெறும் என்று கூறினார்.

இந்த விழாவில் திருவெறும்பூர் தாசில்தார் ஜெயபிரகாசம், திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கங்காதரன் திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கங்காதரன் திருவெறும்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் தமிழ்ச்செல்வி, குண்டு ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி திருமுருகன், ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், மற்றும் அரசு அலுவலர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்

Leave A Reply

Your email address will not be published.