புதிதாக கட்டப்பட்டுள்ள 1000 வகுப்பறைகள் : முதலமைச்சர் திறந்து வைத்தார்
சென்னை தலைமை செயலாளர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.150 கோடி செலவில் 37 மாவட்டங்களிலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் கட்டப்பட்டுள்ள 1000 புதிய வகுப்பறைகளை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் அமைச்சர்கள் இ. பெரியசாமி, அன்பில் மகேஸ், தலைமை செயலாளர் சிவ்தாஸ்மீனா பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா, ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் செந்தில்குமார், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை இயக்குநர் பொன்னையா, இந்தியன் வங்கி செயல் இயக்குநர் பஜாஜ், மாநில தகவல் ஆணையர் அந்தோணி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.