மண்டல அளவிலான காவல்துறை ஆணையக் கூட்டம்

0 343
Stalin trichy visit

திருச்சி, செப்.27 திருச்சி கலையரங்கில் இன்று 5–வது போலீஸ் கமிஷன் கூட்டம் மாண்புமிகு நீதியரசர் (ஓய்வு) சி.டி.செல்வம் தலைமையில் மண்டல அளவில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் ஆகியோரிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காவல் ஆணைய உறுப்பினர்கள் அலாவுதீன் (ஓய்வு), ராதாகிருஷ்ணன்(ஓய்வு), பேராசிரியர் நளினிராவ், டாக்டர் ராமசுப்பிரமணியன், மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன், மாநகர காவல் ஆணையர் காமினி, தஞ்சை சரக காவல்துறை துணைத் தலைவர் ஜெயச்சந்திரன், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய 9 மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.