சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை சார்பில் மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம்

0 296
Stalin trichy visit

திருச்சி, செப்.27 திருச்சி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், கரூர் மாவட்ட அலுவலர்களுடனான மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அரசு முதன்மை செயலாளர் சுன்சோங்கம் ஜடக்சிரு, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஆணையர் அமுதவல்லி, மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணிகள் இயக்குநர் மற்றும் குழும இயக்குநர் சந்திரகலா, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை கூடுதல் இயக்குநர் கார்த்திகா, மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை இணை இயக்குநர் (சிறப்புத் திட்டம்) உமாதேவி, சமூக பாதுகாப்புத்துறை துணை இயக்குநர் கஸ்தூரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.