காந்தியடிகள் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு கதர் விற்பனை தொடக்கம்

0 181
Stalin trichy visit

காந்தி ஜெயந்தி விழா காந்தி சிலைக்கு திருச்சி மாவட்ட மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் தொடர்ந்து காதி கிராப்ட் விற்பணையகத்தில் தீபாவளி விற்பனையை துவக்கி வைத்தார்.

தேச தந்தை மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது அதனையொட்டி இந்திய முழுவது உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் , அரசு அதிகாரிகள் போதுமக்கள் என பல்வேறு தரப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்

இந்நிலையில் இன்று திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே உள்ள காந்தி சிலைக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

தொடர்ந்து திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் எதிரே உள்ள காதி கிராப்ட் வளாகத்தில் காந்தி திருவுருவ படத்தை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் மேயர் அன்பழகன் ஆகியோர் திறந்து வைத்து தீபாவளி கதர் சிறப்பு விற்பனையை துவக்கி வைத்தனர்

தீபாவளி சிறப்பு விற்பனையில் கதர், பாலியஸ்டர் , பட்டு ரகங்களுக்கு 30 சதவீதம், உல்லன் ராகங்களுக்கு 20 சதவீதம் அரசு தள்ளுபடி வழங்குகிறது

கடந்த ஆண்டு 2. 17 கோடிக்கு தீபாவளி விற்பனையானது இந்த ஆண்டு 3. 78 கொடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது

Leave A Reply

Your email address will not be published.