கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாநில அளவிலான பேச்சுப்போட்டி

0 322
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் திமுக பொறியாளர் பிரிவு அணி சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான மாநில அளவிலான பேச்சுப்போட்டி நடைபெற்றது.

திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திமுக வடக்கு மாவட்ட பொறியாளர் அணி சார்பில் தொட்டியம் கொங்குநாடு கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற பேச்சு போட்டியை முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் தலைமை வகித்து துவக்கி வைத்தார். கல்லூரியின் தாளாளர் பெரியசாமி,மற்றும் பொறியாளர் அணி நிர்வாகிகள் நல்லியண்ணன்,
ராஜேஷ் கண்ணா, முருகானந்தம் உள்ளிட்ட முன்னிலை வகித்தானர்.வடக்கு மாவட்ட பொறியாளர் அணி
அமைப்பாளர் ரமேஷ் அனைவரையும் வரவேற்றார். கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திமுக பொறியாளர் அணி சார்பில் நடைபெறும் மாநில அளவிலான பேச்சுப் போட்டியில் வெற்றி பெறும் மாணவ மாணவிகளுக்கு பரிசாக ஒரு லட்சம் முதல் ஐந்து லட்சம் வரை பரிசு வழங்கப்பட உள்ளது. முதல் கட்டமாக சட்டமன்ற அளவிலும், இரண்டாம் கட்டமாக மண்டல அளவிலான போட்டியும், மூன்றாம் கட்டமாக மாநில அளவிலான போட்டியும் நடைபெறும்.
பேச்சுப் போட்டியில் இளங்கலை,முதுகலை பயிலும் பொறியியல் மற்றும் கல்லூரி மாணவர்கள், பாலிடெக்னிக் மாணவர்கள் ஐடி மாணவர்கள் பங்கேற்கலாம்.
போட்டியின் தலைப்பாக தொழில்நுட்பக் கல்விக்கு தோள் கொடுத்த கலைஞர், தொழில்துறையை உயர்த்திய தமிழின தலைவர், திராவிட மாடலும் திறன்மிக்க கல்வியும், தெற்கு சூரியன், கலைஞரும் தமிழும் என ஐந்து தலைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. போட்டியின் நடுவர்களாக தமிழ் பட்டதாரி ஆசிரியர் பிரேம் குமார்,
கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் செயல்பட்டனர்.
பொறியியல் படிக்கும் மாணவ மாணவிகள் சுமார் 250 பேர் பேச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டனர். தகுதி சுற்றில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தலா பத்தாயிரம், ஐந்தாயிரம், மூன்றாயிரம் என பரிசுகள் வழங்கப்பட்டது.
போட்டியினை பொறியாளர் அணி நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.