பெண்னை மரத்தில் கட்டி வைத்து தாக்குதல் . 6 பேர் மீது வழக்கு பதிவு

0 194
Stalin trichy visit

திருச்சி, அக்.5 திருச்சி மாவட்டம்,  தா.பேட்டை அருகே உள்ள வாழவந்தி கிராமத்தை சேர்ந்தவர் செல்லமுத்து. இவருக்கு செல்வராஜ், குமரவேல், குமார், தங்கராஜ் உள்ளிட்ட மகன்கள் உள்ளனர். இந்நிலையில் செல்லமுத்து தனக்கு சொந்தமான சொத்துக்களை மகன்களுக்கு பிரித்து கொடுத்துள்ளார். இந்த சொத்து தொடர்பாக மகன்களுக்குள் கருத்து வேறுபாடு நிலவி வந்துள்ளது. இந்தநிலையில் செல்லமுத்துவின் மகன்கள் செல்வராஜ், தங்கராஜ் குமரவேல் ஆகியோர் தங்கள் பாகத்தை வேறு ஒருவருக்கு விற்றதாக தெரிகிறது. ஆனால் இந்த சொத்தில் தனக்கும் பங்கு உள்ளதாக குமாரின் மனைவி சரஸ்வதி கூறி வந்துள்ளார். இந்தநிலையில் செல்வராஜ் தங்கள் பாகத்திற்கு உரிமையான கிணற்றிலிருந்து பழனியாண்டி வயலுக்கு தண்ணீர் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதை கண்ட செல்லமுத்துவின் மகன் குமாரின் மனைவி சரஸ்வதி (40). பொது கிணற்றில் இருந்து தண்ணீர் வேறு வயலுக்கு கொடுக்கக் கூடாது என கூறி வாக்குவாதம் செய்துள்ளார். ஒரு கட்டத்தில் இரு தரப்பினருக்கும் இடையே வாய் தகராறு கைகலப்பாக மாறியது. இதில் பழனியாண்டி, செல்வராஜ், தங்கராஜ், குமரவேல் உறவினர் சின்னத்தம்பி என்கின்ற சின்னத்திரை, சுமதி ஆகியோர் நியாயம் கேட்டு வந்த சரஸ்வதியை அடித்து உதைத்து அங்கிருந்த மரத்தில் கட்டி வைத்து மானபங்கம் செய்ய முயன்றுள்ளனர். இது குறித்து சரஸ்வதி 100 என்ற எண்ணுக்கு அழைத்து போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மரத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த சரஸ்வதியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் முசிறி அரசு மருத்துவமனைக்கு சரஸ்வதியை அனுப்பி வைத்தனர். போலீசாரை கண்டவுடன் தகராறில் ஈடுபட்ட நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். இதுகுறித்து ஜெம்புநாதபுரம் காவல் நிலைய போலீசாரிடம் சரஸ்வதி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிந்து பழனியாண்டி (59) என்பவரை கைது செய்தனர். மேலும் செல்வராஜ், தங்கராஜ், குமரவேல், சின்னதம்பி, சுமதி உள்ளிட்ட ஐந்து பேர் மீது வழக்கு பதிந்து தலைமறைவாக உள்ள நபர்களை தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.